விடலைப் பருவத்தில் தவறான நண்பர்களின் சேர்க்கை, காதல் பிரச்னைகளால்
அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். "அந்த வயதில் அவர்களை மாற்றுவதைவிட,
மழலைப் பருவத்திலேயே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்கின்றனர்,
மதுரை அரசு மருத்துவமனை மனநலத் துறைத் தலைவர் குமணன், டாக்டர் கீதாஞ்சலி.
அவர்கள் கூறியதாவது:
13 முதல் 19 வயது வரையுள்ள விடலைப் பருவப் பிரச்னைகளுக்கு தான் அதிக
முக்கியத்துவம் தருகிறோம். பிள்ளைகள் கேட்பதை எல்லாம் வாங்கித் தருவது,
முதல் மதிப்பெண் பெற்றால், பொருள் வாங்கித் தருவேன் என்று சொல்வதும்,
மழலைப் பருவத்திலேயே பொருளின், பணத்தின் மீது ஈடுபாட்டை ஏற்படுத்தி விடும்.
படிப்பிலோ, விளையாட்டிலோ ஜெயித்தால் மனதார பாராட்டலாம், தட்டிக்
கொடுக்கலாம், அரவணைக்கலாம்.
பெற்றோரே காரணம்
"நான் பட்ட கஷ்டம்... என் பிள்ளை படக்கூடாது, சந்தோஷமான
மனநிலையில் மட்டுமே பிள்ளை வளரவேண்டும்" என, பெற்றோர் நினைப்பது தான்
முதல் தவறு. இதுவே, தோல்வியை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை
தகர்த்துவிடுகிறது. மழலைப் பருவத்தில் ராஜ வாழ்க்கை வாழவைத்து விட்டு,
விடலைப் பருவத்தில் இறுக்கிப் பிடிக்கும் போது எதிர்கொள்ள முடியாமல் தவறான
முடிவைத் தேடுகின்றனர்.
தவறே செய்தாலும் அதை அடிக்கடி சொல்லி காட்டி அடித்தால்
செய்த தவறு மறந்துபோய் பெற்றோர் அடித்தது மட்டுமே நினைவிருக்கும். இது,
மேலும் தவறுக்கு வழிவகுக்கும். பிள்ளைகளின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும்
"டிவி" பாதிக்கிறது என்ற உண்மையை, பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.
விளையாட்டே முக்கியம்
வகுப்பறையில், வீட்டில் ஆசிரியர், பெற்றோர் சொல்லித்
தருவதை கேட்க வேண்டிய கட்டாயம். விளையாட்டு தான் மாணவனை பக்குவப்படுத்தும்.
மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் அணுகுமுறையை யாரும் சொல்லித் தராமலேயே
தானாக கற்றுக் கொள்வர். தெருவில் இடமில்லாவிட்டால் வீடுகளில் விளையாட
அனுமதிக்க வேண்டும். சமூகத்தை எதிர்கொள்ளும் துணிவு, தோல்வியைத் தாங்கும்
மனப்பக்குவம் வரவேண்டுமெனில் பெற்றோர் தங்களின் அணுகுமுறையை மாற்றிக்
கொள்ள வேண்டும்" என்றனர்.
"டிவி" வேண்டாமே
தினமும் மூன்று மணிநேரம் "டிவி" பார்க்கும் பிள்ளைகள் வாலிப
பருவத்தில் சாதாரண, திறமையில்லாத வேலைகளையே பார்க்கின்றனர். இரண்டு மணி
நேரம் பார்ப்பவர்கள் அலுவலக வேலை செய்கின்றனர். ஒரு மணி நேரத்திற்கும்
குறைவாக பார்ப்பவர்கள் தான் ஜெயிக்கின்றனர். இது வெளிநாட்டு ஆய்வு ஒன்றில்
தெரியவந்துள்ளது.
உணவு அளிப்பேதே பெரிய வேலை என்று பல பெற்றோர்களும் நினைக்கின்றனர்.எனது உறவினர் சிகரெட் புகையை வட்டமாக விட்டுக் கொண்டிருந்தார்.இதை சற்று வியப்போடு பார்த்த எனது 5 வயது பையன் தனது பென்சிலை வாயில் வைத்து சிகரெட் புகைப்பதுபோல பாவனை செய்து வட்டமாக புகையை விடுவதுபோல் முயன்ற கொண்டிருந்தான். நான் ”அவனிடம் ” சிகரெட்டின் ஒரு நுனியில் நெருப்பு உள்ளது.மறு நுனியில் ஒரு முட்டாளின் உதடு உள்ளது ” என்ற பொன்மொழியை விளக்கி மனப்பாடமாக ஒப்புவிக்கச் செய்தேன். பிரச்சனை தீர்ந்தது.
ReplyDeleteஇந்து மாணவர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு , -ராமகிருஷ்ண தபோவனம் மடம் போன்ற அமைப்புகள் நடத்தும் அந்தர்யோக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். விரிவான தொடர்ந்து கலாச்சாரக்கல்வி அளிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் கருத்துக்கள் மனதில் ஆழப்பதியும்.திரைப்படங்கள் அனைத்தும் குப்பையாக உள்ளது. குடும்பமே திரைப்படங்களில் முழ்கி உள்ளது. பெண்கள் மிகக் குறைந்து அளவில் உடை உடுத்தி காட்சி அளிக்கின்றனர். பெண்களை குறைந்த உடையில் படுக்க வைத்து பல பேர் தலையில் இருந்து கால்வரை முகர்ந்து பார்ப்பதுபோன்ற காட்சிகள் கூட உள்ளன. சதா காமஉணர்ச்சியை தூண்டுவதாக வே திரைப்படங்கள் உள்ளன. காதலை மையக்கருத்ாக வைக்காத திரைப்படங்கள் ஆங்கில மொழயில் ஏராளம்.குறிப்பான ஈரான் துருக்கி நாட்டு திரைப்படங்களில் ஆபாசம் இருக்காது.நமது நாட்டிலும் இதுபோன்ற மாற்றம் வர வேண்டும்.திரைப்படங்கள் ஒழுங்கு படுத்தப்படவில்லையெனில் இளைய சமுதாயம் மனித வளம் குன்றி ... வினாகிப் போய்விடும்.
a very good message
Deleteஅனைவருக்கும் பாலியல் கல்வி அளிக்கப்படவேண்டும். சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் ” இளைஞர் சக்தி ” என்ற புத்தகம் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் பாலியல் கல்வி அளித்தால் வரவேற்கலாம். பிரம்மச்சரியம் பிரதிப்னனம் வீரிய லாப -பிரம்மச்சரியம் உடலுக்கும் மனதிற்கும் உயர்ந்த நன்மைகளை வழங்கும்..சமூகத்திற்கும் உயந்த நன்மைகளை வழங்கும். பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கச் சட்டம் இல்லை.ஆனால் சுயகட்டுப்பாட்டுண்ர்வை வளர்க்க நம்மிடம் என்ன திட்டம் உள்ளது? ஆண்களிடம் பிரம்மச்சரிய உண்ரவும் , ஏக பத்தினி விரத உணர்வு பெருகும் அளவிற்கு பெண்கள் சமூதாயத்தில் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பது நிச்சயம்.மேற்படி பண்புகளை புதுப்பிக்க திரைப்படங்கள் உதவிட வேண்டும். பிரம்மச்சரிய ஆஸ்ரமம் அழிந்ததுதான் இந்தியா பலதுறைகளில் தான் பெற்ற உன்னதங்களை இழந்து தோல்வியுற்று அந்நிய நாட்டு சக்திகளுக்கு அடிமைப்பட்டு தோல்வியுற்றது என்கிறார்.
ReplyDelete"டிவி" வேண்டாமே
ReplyDeleteதினமும் மூன்று மணிநேரம் "டிவி" பார்க்கும் பிள்ளைகள் வாலிப பருவத்தில் சாதாரண, திறமையில்லாத வேலைகளையே பார்க்கின்றனர். இரண்டு மணி நேரம் பார்ப்பவர்கள் அலுவலக வேலை செய்கின்றனர். ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக பார்ப்பவர்கள் தான் ஜெயிக்கின்றனர். இது வெளிநாட்டு ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இக்கருத்து அனைவரையும் அடையச் செய்ய வேண்டுமே! அது எப்படி?