பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல், நேற்று மாலை வெளியிடப்பட்டது. 
பொறியியல் சேரும் மாணவர்கள், இ.சி.இ., - எம்.இ., பாடப்பிரிவுகளை தேர்வு 
செய்ய, ஆர்வம் தெரிவித்துள்ளனர். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, 21ம் 
தேதி துவங்குகிறது.
மாநிலத்தில் உள்ள, 550 பொறியியல் 
கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள், இந்த ஆண்டு 
நிரப்பப்பட உள்ளன. அண்ணா பல்கலை, தகுதியான விண்ணப்பங்களாக ஏற்றுக்கொண்ட, 
1.82 லட்சம் விண்ணப்பதாரர்களின், ரேங்க் பட்டியலை, உயர்கல்வி அமைச்சர் 
பழனியப்பன், நேற்று மாலை வெளியிட்டார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த அபினேஷ், முதலிடம் பிடித்துள்ளார். 
பிற்படுத்தப்பட்டோர் பிரிவு சார்பிலும், இவரே, முதலிடம் பிடித்தார். 
நாமக்கல் மாவட்டம், கிரீன்பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த இவர், 
பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில், முதலிடம் பிடித்தார்.
மருத்துவம், பொறியியல் இரண்டிலும், முதலிடத்தை பிடித்துள்ள அபினேஷ், 
மருத்துவம் படிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.மருத்துவம் மற்றும் 
பொறியியல் ரேங்க் பட்டியலில், இரண்டாம் இடம் பிடித்த பரணீதரனும், 
மருத்துவம் படிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்த ரகுநாதன், பி.இ., ரேங்க் பட்டியலில், 
மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இவரது, "கட்-ஆப்&' 200க்கு, 200. 
அண்ணா பல்கலையில், இ.சி.இ., அல்லது எம்.இ., படிப்பை தேர்வு செய்ய உள்ளதாக, 
ரகுநாதன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவி ரவீணா, நான்காம் 
இடத்தை பிடித்துள்ளார். இவரும், மருத்துவ ரேங்க் பட்டியலில், முதல் பத்து 
இடங்களில் இடம் பிடித்துள்ளார். இவரும், மருத்துவம் படிக்க முடிவு 
செய்துள்ளார். ரேங்க் பட்டியலில், "டாப்&' 15 இடங்களை பிடித்துள்ள 
மாணவர்களில், நான்கு பேர் மாணவியர்; 11 பேர் மாணவர்கள். இவர்களில், 
ஒருசிலரைத் தவிர, மற்ற அனைவரும், அண்ணா பல்கலையில் சேர முடிவு 
செய்துள்ளனர்.
கோவை, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கவுதம், சேலம் மாவட்டம், மேட்டூரைச் 
சேர்ந்த ஆனந்த், கோவை, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பகவான்த் கவுசிக், 
ஆகியோர், முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். 
முதல், 15 இடங்களில், இரண்டு பேர் மாணவியர்; 13 பேர், மாணவர்கள். இந்த 
பிரிவு மாணவர்கள் அனைவருமே, அண்ணா பல்கலையை தேர்வு செய்வர் என, 
எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு லட்சத்து, 89 ஆயிரத்து, 399 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 6,766 
விண்ணப்பங்கள், தகுதியில்லாதவையாக நிராகரிப்பட்டதாக, அண்ணா பல்கலை 
தெரிவித்துள்ளது. மீதம் உள்ள ஒரு லட்சத்து, 82 ஆயிரத்து, 633 விண்ணப்பங்கள்
 ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அனைத்து மாணவர்களுடைய ரேங்க் விவரங்களும், www.annauniv.edu என்ற இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டன.
பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது: ஒரே, 
"கட்-ஆப்&' மதிப்பெண், கணிதத்தில் ஒரே மதிப்பெண், இயற்பியலில் ஒரே 
மதிப்பெண், நான்காவது பாடத்தில் ஒரே மதிப்பெண், பிறந்த தேதியும் ஒன்று என, 
அனைத்து நிலைகளிலும் ஒரே மாதிரியாக வரும் மாணவர்களுக்கு, கடைசியாக, 
"ரேண்டம் எண்&' பயன்படுத்தி, அதிக மதிப்பு கொண்ட மாணவருக்கு முன்னுரிமை
 தரப்படுகிறது.அதன்படி, இந்த ஆண்டு, 23 மாணவர்களுக்கு, "ரேண்டம் எண்&' 
பயன்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு, ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.
  
No comments:
Post a Comment