தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், "ஐ.டி., துறைகளின் எதிர்காலம்" என்ற
தலைப்பில், டி.சி.எஸ்., துணைத் தலைவர், ஹேமா கோபால் பேசுகையில்,
நகர்ப்புறங்களில் வசிப்பவர், ஆரம்ப பள்ளியில் இருந்தே ஆங்கில
வழிக்கல்வியில் படித்தவர், நுனி நாக்கு ஆங்கிலம் பேசுபவர் மட்டுமே, ஐ.டி.,
துறைகளில் வேலை பார்க்க முடியும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இது முற்றிலும் தவறு.
தமிழ் வழியில் படித்தவரும்,
ஐ.டி., துறையில் சாதிக்கலாம். ஆனால், தேவையான தகுதிகள் வேண்டும். முன்,
சென்னையில் மட்டுமே காலூன்றிய, ஐ.டி., துறை, தற்போது, கோவை, திருநெல்வேலி,
ஓசூர், மதுரை போன்ற பகுதிகளிலும் பரவியுள்ளது. தமிழக அரசின் அனைத்து
சேவைகளும், கணினி வழி நடக்க வேண்டும் என, அரசு பல்வேறு விதங்களில்
முயற்சித்து வருகிறது. அதனால், பல்வேறு தளங்களில், ஐ.டி., துறைகளில்
வாய்ப்பு, பிரகாசமாக உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும்
மாணவர்களுக்கு, கேள்வித்தாள் வழங்கப்படும். அதில், மாணவர்களின், சமயோஜித
அறிவு, பொது அறிவு குறித்து, கேள்விகள் கேட்கப்படும். அதற்கு, சரியான பதில்
எழுதி, &'வழிகாட்டி&' நிகழ்ச்சி குறித்து, முழக்க வாசகங்கள்
எழுதும் மாணவர் ஒருவருக்கு, சிறிய கணிப்பொறியான, &'டேப்லெட்&'
மற்றும் &'வாட்ச்&' பரிசாக வழங்கப்படும். இப்போட்டியில், மாணவர்
கட்டுமே, கலந்து கொள்ள முடியும். காலை, மாலை என, இரண்டு வேளையும் பரிசை
வெல்வதற்கு வாய்ப்புள்ளதால், மாணவர்கள் தவறாமல் கருத்தரங்குகளில், கலந்து
கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment