ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு, இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற,
27 ஆயிரம் பேருக்கு, வரும், 7ம் தேதியில் இருந்து, சான்றிதழ் சரிபார்ப்பை
நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்திருந்தது. முதல் தாள் சான்றிதழ்
சரிபார்ப்பு, மாநிலம் முழுவதும், ஐந்து மண்டலங்களில் நடந்தது.
ஆனால்,
இரண்டாம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பை, 32 மாவட்டங்களிலும் நடத்த,
டி.ஆர்.பி., திட்டமிட்டது. இதற்காக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை,
பணிக்கு அனுமதிக்குமாறு, தேர்வுத் துறையிடம், டி.ஆர்.பி., கேட்டது.
ஆனால்,
'வரும், 20ம் தேதி வரை, தேர்வுப் பணிகள் இருப்பதால், முதன்மை கல்வி
அலுவலர்களை அனுமதிக்க முடியாது' என, தேர்வுத் துறை தெரிவித்து விட்டது.
இதனால், வேறு வழியின்றி, தேர்தலுக்குப்பின், இம்மாத கடைசியில், சான்றிதழ்
சரிபார்ப்பை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.
WynnCasino.com Promo Code: MAXFREE for New Customers
ReplyDeleteWynnCasino.com 속초 출장안마 Promo Code: MAXFREE 광주광역 출장샵 for New Customers · Wynn Resorts · 강원도 출장안마 WynnBET Sportsbook Promo Code: MAXFREE for $1000 1xbet Risk-Free Bet 부천 출장안마 · WynnBET Promo Code: MAXFREE for $1000