சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையிலான வினா - விடை
புத்தகத்தை கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டார்.
சேலம் ஜெயராம் பப்ளிக் ஸ்கூல், வைஸ்யா கல்லூரி மற்றும்
நரசுஸ் சாரதி கல்லூரி நிர்வாகிகள் இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சிக்காக வினா விடை
புத்தகத்தை அச்சடித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் வழங்கினர். அவற்றை,
சேலம் கலெக்டர் மகரபூஷணம் அதிகாரிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
சி.இ.ஓ., ஈஸ்வரன் கூறியதாவது: கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில்
சேலம் மாவட்டம் 89.4 சதவீத தேர்ச்சியை எட்டியது. அப்போது 18 லட்சம் ரூபாய்
செலவில் இரண்டு லட்சம் பிரதிநிதிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் 7
சதவீதம் அதிகம் கிடைத்தது. 2014ல் 25 லட்சம் ரூபாய் செலவில் 2.50 லட்சம்
பிரதிநிதி அச்சடிக்கப்பட்டு கலெக்டரால் வெளியிடப்பட்டுள்ளது. அவை, அரசு
மற்றும் அரசு உதவி பெறும் 165 பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
நடப்பு ஆண்டில் 95 சதவீத தேர்ச்சியை எட்டுவதற்கு உண்டான முயற்சியை
எடுத்துள்ளோம்.
அதேபோல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம்
எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவர்களுக்காக 3.20 லட்சம் பிரதி அச்சடிக்கப்பட்டு
பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தேர்ச்சியை அதிகரித்து மாநில
அளவில் சேலம் மாவட்டம் சிறப்பிடத்தை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment