2013, பிப்வரியில் நடக்கும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான
விண்ணப்பங்களை ஆன்-லைனில் பெற்றுக் கொள்ளலாம் என, தொழில்நுட்ப கல்வித்துறை
தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கல்வி துறையால் நடத்தப்படும், தட்டச்சு, சுருக்கெழுத்து,
கணக்கியல் தேர்வுகள் 2013, பிப்ரவரியில் நடைபெற உள்ளன. இதில் விண்ணப்பிக்க
விரும்பும், அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகங்கள் மற்றும் தனி
தேர்வர்கள், www.tndte.com, www.tndte.gov.in என்ற இணையதளத்திலிருந்தும், தொழில்நுட்ப கல்வி அலுவலகத்தில் இருந்தும் விண்ணப்ப படிவங்களை பெறலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தனி தேர்வர்கள்,
நேரிலோ அல்லது தபால் மூலமோ டிசம்பர் 11ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட பயிலகங்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நேரிலோ
அல்லது தபால் மூலமோ, டிசம்பர் 13ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும்
தகவல்களுக்கு, 044-2235 1018 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment